/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 4 பேரிடம் மோசடி சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
/
புதுச்சேரியில் 4 பேரிடம் மோசடி சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
புதுச்சேரியில் 4 பேரிடம் மோசடி சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
புதுச்சேரியில் 4 பேரிடம் மோசடி சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
ADDED : நவ 01, 2024 05:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு வகையில் பொதுமக்களை ஏமாற்றிய சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இளைஞர் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராமில், ஒரு பெண் அறிமுகமானார். இருவரும் பேசி அறிமுகமாகி நட்பாகினர். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தன்னுடைய நிர்வாண படங்களை அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த சில தினங்களில், அந்த பெண்ணின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர் பெண்ணுக்கு அனுப்பிய படங்களை வைத்து, மர்ம நபர்கள் சிலர் அவரை பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு பிறகே, பெண் போல தொடர்பு கொண்டு, அவரை மர்ம நபர்கள் ஏமாற்றியது தெரிந்தது.
இது ஒரு புறம் இருக்க, ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டதை கண்டு, இளைஞர் ஒருவர், 6 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால் அவருக்கு பட்டாசு வரவில்லை. அதேபோல, இளைஞர் ஒருவருக்கு, கிரெடிட் கார்டு மூலம் பெறும் கடன் தொகையை அதிகரிப்பதாக, மர்ம நபர்கள் சிலர் தெரிவித்தனர். அவரும் நம்பி, ஓ.டி.பி., எண்ணை, அனுப்பி வைக்க, அவரது அக்கவுண்டில் இருந்து, ரூ.28 ஆயிரம் பறிபோனது.
மேலும், கொரியரில் போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளதாகவும், மும்பையில் இருந்து போலீசார் பேசுவதாகக்கூறி, மர்ம நபர்கள் ஒரு இளைஞரை மிரட்டினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், புகார் அளித்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.