/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரில் வந்து நகை திருடிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது
/
காரில் வந்து நகை திருடிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது
காரில் வந்து நகை திருடிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது
காரில் வந்து நகை திருடிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : செப் 26, 2024 01:01 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் நகைக் கடையில் திருடிய 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுாரை சேர்ந்தவர் சங்கர், 53; நகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் மூன்று பெண்கள் ஸ்விப்ட் டிசையர் காரில் வந்தனர்.
நகை வாங்குவதுபோல் பேசி, ஒரு சவரன் கம்மலை திருடிக் கொண்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்து விட்டு சென்றனர்.
நகை மாறியுள்ளதை அறிந்ததும் சங்கர் சத்தமிட்டார். அங்கிருந்த பொது மக்கள் பெண்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த சாந்தி, 40; சத்தியா, 36; சுதா, 45; கார் டிரைவர் சத்தியமூர்த்தி, 33, ஆகியோர் என தெரியவந்தது.
வளத்தி போலீசார் வழக்கு பதிந்து, நால்வரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.