/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ராங் ரூட்' பஸ் மீது கார் மோதல் குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
/
'ராங் ரூட்' பஸ் மீது கார் மோதல் குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
'ராங் ரூட்' பஸ் மீது கார் மோதல் குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
'ராங் ரூட்' பஸ் மீது கார் மோதல் குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
ADDED : டிச 26, 2024 07:00 AM

கண்டமங்கலம்: கெங்கராம்பாளையம் டோல்கேட் அருகே, 'ராங் ரூட்டில்' வந்த பஸ் மீது கார் மோதியதில், அதில் பயணித்த குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் மாலை வில்லியனுார், கண்டமங்கலம், மதகடிப்பட்டு வழியே மடுகரை நோக்கி தனியார் பஸ் (பி.ஒய்.01 பி.டபிள்யூ 1212) புறப்பட்டது.
அந்த பஸ், மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு மேம்பாலத்திற்கு தெற்கே உள்ள சர்வீஸ் சாலை வழியே மடுகரைக்கு செல்ல வேண்டும். ஆனால், விதிகளை மீறி மதகடிப்பட்டு எல்லைப்பகுதியில் தனியார் மருத்துவக் கல்லுாரி சாலை சந்திப்பு அருகே பயணிகளை ஏற்றிச்செல்ல, மதகடிப்பட்டு மேம்பாலத்தின் வழியே 'ராங் ரூட்டில்' சென்றது.
தமிழக எல்லைப்பகுதியான கெங்கராம்பாளையம் டோல்கேட் கிழக்கே 500 மீட்டர் தொலைவில், எல்.ஆர். பாளையம் தனியார் டைல்ஸ் ஷோரூம் அருகே, வடக்கே உள்ள சர்வீஸ் சாலைக்கு பஸ் அதிவேகமாக திரும்பியது.
அப்போது, எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த டி.என்.88.ஏ-3688 பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் மீது தனியார் பஸ் மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம் அந்தனுாரை சேர்ந்த யுவராஜ்,40; அவரது மனைவி தர்ஷினி,30; ஒரு வயது குழந்தை கனிஷ்கா, காரை ஓட்டிய மைத்துனர் மணிகண்டன்,39; ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பஸ் மோதிய வேகத்தில் காரில் இருந்த ஏர் பலுான் விரிந்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
காரில் சிக்கிய 4 பேரையும், அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து, தனியார் பஸ் 'ராங் ரூட்டில்' வந்ததாலேயே ஏற்பட்டுள்ளது. இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, தனியார் பஸ்சை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

