/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்குவாரியில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது
/
கல்குவாரியில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது
கல்குவாரியில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது
கல்குவாரியில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது
ADDED : நவ 30, 2024 06:32 AM

வானுார் : திருவக்கரை கல்குவாரியில் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், முக்கிய நபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை கல்குவாரியில் கடந்த 23ம் தேதி ஆண் சடலம், தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் கிடந்தது. இதுகுறித்து வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், இறந்தவர், திருவெண்ணைநல்லுார் அடுத்த சரவணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜதுரை, 32; என்பதும், முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அவரை அடித்து கொலை செய்து, உடலை வெட்டி கல்குவாரியில் வீசியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், கொலைக்கு துாண்டுதலாக இருந்த மாரி (எ) மாரிமுத்து உட்பட சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் மாரி (எ) மாரிமுத்து, 32; குவாரிக்குள் உடலை வீசுவதற்கு உதவிய கடலுார் மாவட்டம், புவனகிரி ராஜசேகர், 29; விருத்தாசலம் கமாருதீன், 24; நெய்வேலி ராஜ்குமார், 28; ஆகிய 4 பேரையும் நேற்று தனிப்படை போலீசார் சென்னையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், ராஜ்குமார், கமாருதீன், ராஜசேகர் ஆகிய மூவரும், வழிப்பறி, திருட்டு வழக்குகளில் கைதாகி கடலுார் மத்திய சிறையில் இருந்தபோது, மாரி (எ) மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அழைத்ததின் பேரில், ராஜதுரை உடலை குவாரிக்குள் வீசுவதற்கு துணையாக இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, மாரி (எ) மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் நேற்று வானுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்..
தலையை தேடும் போலீசார்
கடந்த 23ம் தேதி ராஜதுரையின் உடல் கல்குவாரியில் கண்டெடுக்கப்பட்டது. தலை, கை, கால்கள் நேற்று வரை கிடைக்கவில்லை. தண்ணீர் அதிகமாக உள்ளதால், உடல் பாகங்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நேற்று குவாரியில் உள்ள தண்ணீரை நான்கு மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் வானுார் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
தற்போது மழை பெய்து வருவதால், தண்ணீர் அதிகப்படியாக வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் தலை, கை, கால்களை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

