ADDED : நவ 15, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குப்பை அகற்றும் வானகம் மோதி நான்கு பைக்குகள் சேதமடைந்தது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்திரையர்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன்,53. இவர், நேற்று (நவ.,14) தனது ஸ்கூட்டரை (பிஒய்.05.டி.0261) தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற குப்பை அள்ளும் டாடா ஏஸ் வாகனம் சரவணனின் ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு, தறிகெட்டு ஓடியது. இதில் அப்பகுதியில் நிறுத்தியிருந்த மூன்று பைக்குகளில் மோதி நின்றது.
சரவணன் அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
