இந்திரா நகர் தொகுதியில் பாதாள சாக்கடை பணி முடக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
இந்திரா நகர் தொகுதியில் பாதாள சாக்கடை பணி முடக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
UPDATED : நவ 15, 2026 06:16 PM
ADDED : நவ 15, 2026 06:16 PM

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடக்கப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதியில் உள்ள குரு நகரில் பாதாள சாக்கடை தோண்டுவதற்காக பொதுப்பணி துறையால் சாலையின் நடுவில் இரண்டு பாகமாக பிரித்து பாதாள சாக்கடை புதிதாக கட்டும் பணி துவக்கப்பட்டது. அதனால் முழுமையான தார் சாலை ஒத்தையடி பாதையாக மாறி தற்போது வாகனங்கள் பொதுமக்கள் செல்ல முடியாத சாலையாக மாறிவிட்டது.
கடந்த 2025 முதல் இன்று வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாமல் உள்ளது. அங்குள்ள பள்ளங்களில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை இன்று வரை தொடர்கிறது.
அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில் அந்த சாலை முழுதும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, பாதாள சாக்கடை பணிகளை துரிதிபடுத்தி புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
