/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் 4 கிராமங்கள் புறக்கணிப்பு
/
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் 4 கிராமங்கள் புறக்கணிப்பு
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் 4 கிராமங்கள் புறக்கணிப்பு
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் 4 கிராமங்கள் புறக்கணிப்பு
ADDED : மார் 10, 2026 04:04 AM
புதுச்சேரி: அரசு சமீபத்தில் அறிவித்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரண திட்டத்தில் 4 கிராமங்கள் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவது போல், விவசாய தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று முதல்வர் ரங்கசாமி, விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேளாண் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து, தகுதியான விண்ணப்பங்கள் வேளாண்துறை மூலம உருவாக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சுமார், 7,000 உறுப்பினர் விபரங்கள் வேளாண்துறை இணையதளத்தில் சமூக தணிக்கைக்காக வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி அரியூரில் நடந்த விழாவில் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை கவர்னர் வழங்கினார். அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கில், கடந்த வாரம் மழைக்கால நிவாரணம் ரூ.2,000 வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், கரையாம்புத்தூர் உழவர் உதவியகத்தை உள்ளடக்கிய வருவாய் கிராமங்களான கரையாம்புத்தூர், பனையடிக்குப்பம், மனமேடு மற்றும் கடுவனூர் கிராமங்கள் முற்றிலுமாக விடுபட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்திடும், விவசாய தொழிலாளர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் நேரத்தில் கரையாம்புத்துார் உழவர் உதவியக அதிகாரி மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதனால், அப்பகுதியில் விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரி, கரையாம்பத்தூர் உழவர் உதவியகத்திலிருந்து விண்ணப்பங்கள் வராததை கண்டு கொள்ளாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில், முறையாக கணக்கெடுப்பு நடத்தாத அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். , விடுப்பட்ட தொழிலாளர்கள் மழைக்கால நிவாரண உதவி வழங்கி வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

