/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் மாயம்
/
பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் மாயம்
ADDED : மார் 10, 2026 04:04 AM
புதுச்சேரி: பள்ளிக்கு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
கொம்பாக்கம் செட்டிக்குளம் துர்கா நகரை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களது மகன் கபிலேஷ், 18; இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தலைமுடியை வெட்டி, ஒழுங்காக தேர்வுக்கு படிக்குமாறும் பெற்றோர் கண்டித்தனர்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாலை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அதையடுத்து, மறுநாள் தனது தாய்க்கு மொபைலில் தொடர்பு கொண்ட கபிலேஷ் தன்னை படிக்க சொல்லி கண்டித்ததால், வெளியில் செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என கூறி மொபைலை சுவிட்ஸ் ஆப் செய்துள்ளார்.
தந்தை கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

