/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது
/
ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது
ADDED : ஜன 05, 2026 04:21 AM
அரியாங்குப்பம்: போதையில் ஆபாசமாக பேசிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் மது போதையில், பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக நேற்று அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து, விசாரித்தனர்.
அவர் வீராம்பட்டினம் தீபஒளி நகரை சேர்ந்த ஜான் போஸ்கோ, 32; என்பது தெரியவந்து. அவரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல, சாரம் சுந்தரமூர்த்தி நகர் பகுதியில் போதையில், ஆபாசமாக பேசிய வாழைக்குளத்தை சேர்ந்த பழனிவேல், 28; என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும், சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை அருகே ஆபாசமாக பேசிய வானுாரை சேர்ந்த சுதாகர், 28; என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
கடற்கரை சாலையில், போதையில் தகராறு செய்த , வேலுரை சேர்ந்த கிேஷார்குமாரை, 23; என்பவரை பெரியக்கடை போலீசார் கைது செய்தனர்.

