தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறை வளாகத்தில் 40 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த முடிவு

சிறை வளாகத்தில் 40 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த முடிவு

சிறை வளாகத்தில் 40 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த முடிவு


UPDATED : அக் 31, 2026 12:11 AM

ADDED : அக் 31, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:11 AM ADDED : அக் 31, 2026 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறைக்குள் போதை பொருள் வீசப்படுவதை தடுக்க வளாகம் முழுதும் 40 சி.சி.டி.வி., கேமரா பொருத்த சிறைத்துறை நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள், மது போதையை தாண்டி அதிக போதை வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்காக நகரப் பகுதியில் ஆங்காங்கே கஞ்சா விற்பனை தாராளமாக விற்கப்படுகிறது.

கஞ்சா விற்பது தொடர்பாக ரவுடிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மோதலாக மாறுகிறது. இதனால் போதை தடுப்பு பிரிவு போலீசார் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தி, கஞ்சா விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

இதனால் காலாப்பட்டு மத்திய சிறையில் கஞ்சா ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காலாப்பட்டு சிறையில், 363 ஆண், 13 பெண் என மொத்தம் 376 கைதிகள் உள்ளனர். இதில், தண்டனை கைதிகள் 112 பேர், விசாரணை கைதி 228 பேர் உள்ளனர்.

மொத்தமுள்ள கைதிகளில் 50 சதவீதம் கைதிகள் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டோர், மீண்டும் சிறைக்கு வரும்போது, உடலில் மறைத்து சிறைக்கு கஞ்சா கடத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக, கைதியின் உடலை ஸ்கேன்செய்ய பாடி ஸ்கேனர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் சிறை வெளிப்புறச்சுவர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பொட்டலமாக சிறைக்குள் வீசப்படுகிறது. இதனை தடுப்பதற்காக, சிறையின் வெளிச்சுவர் முழுதும் 40 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த சிறை நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us