UPDATED : அக் 31, 2026 12:11 AM
ADDED : அக் 31, 2026 12:07 AM

நெட்டப்பாக்கம்: நெட்டாப்பாக்கம் ஐ.டி.ஐ., யில் புகையிலை இல்லாத இளைஞர் பிரசாரம் 4.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நெட்டாப்பாக்கம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆரம்ப சுகாதார மையத்தின் பல் மருத்துவர் மற்றும் புகையிலை பழக்க மீட்பு மையத்தின் நோடல் அதிகாரி ஹெலன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு புகையிலையின் தீய விளைவுகள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே அதன் பாதிப்புக்குள்ளாகும் தன்மை குறித்து பவர்பாயிண்ட் விளக்க காட்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து புகையிலைப் பொருட்களின் விற்பனையில், அவற்றின் சுவைகள், வடிவங்கள், வண்ணமயமான உறைகள் மற்றும் வாசகங்களை அடிப்படையாகக் கொண்ட நிகோடின் தொழிற்துறையின் தீய நோக்கங்கள் குறித்தும், வாய் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேலாண்மை, குறித்து விளக்கினார்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பல் உதவியாளர் மோனிகா நன்றி கூறினார்.
