அரசு துறைகளை சீர்படுத்த வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
அரசு துறைகளை சீர்படுத்த வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
UPDATED : அக் 31, 2026 12:06 AM
ADDED : அக் 31, 2026 12:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து துறைகளையும் சீர்படுத்த வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த பணி ஆணை வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் சில பதவிகள் 38 ஆண்டுகள் வரை நிரப்பப்படாமல் இருந்தது. மக்கள் சேவை பாதிக்கூடாது என்பதற்காக அடிப்படை நிர்வாக பதவிகளுக்கு முன்னுரிமை தந்து காலிபணியடங்கள் நிரப்பபட்டது. இந்த தேர்வுகள் நேர்மையான வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது. நீங்கள் பணி ஓய்வு பெறும் வரை உற்சாகமும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்.
உங்களில் பலர் பொருளாதார சவால்களை சமாளிக்கும் எளிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கலாம். இன்று உங்கள் கைகளில் பணி நியமன ஆணை கிடைக்கும் போது உங்கள் பெற்றோர்களின் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவும், நிர்வாகம் வெளிப்படையாக செயல்படவும் உங்களின் பங்களிப்பு முக்கியம்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுங்கள். சில துறைகளில் சில பதவிகள் தேவையில்லை அங்கு பேன் மட்டும் சுற்றிக்கு கொண்டிருக்கும். சில துறைகளில் ஆட்களே கிடையாது. இதை அனைத்து துறைகளிலும் சீர் படுத்த வேண்டும். இதை தலைமை செயலர் செய்ய வேண்டும்’ என்றார்.
