/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 30ம் தேதி மலர் கண்காட்சி 40 ஆயிரம் வண்ண மலர் செடிகள் தயார்
/
புதுச்சேரியில் 30ம் தேதி மலர் கண்காட்சி 40 ஆயிரம் வண்ண மலர் செடிகள் தயார்
புதுச்சேரியில் 30ம் தேதி மலர் கண்காட்சி 40 ஆயிரம் வண்ண மலர் செடிகள் தயார்
புதுச்சேரியில் 30ம் தேதி மலர் கண்காட்சி 40 ஆயிரம் வண்ண மலர் செடிகள் தயார்
ADDED : ஜன 28, 2026 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் 30ம் தேதி துவங்கவுள்ள மலர் கண்காட்சியில் 40 ஆயிரம் வண்ண மலர் செடிகள் இடம் பெறுகின்றன.
புதுச்சேரி, வேளாண் துறை சார்பில் 35ம் ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி ஜன.30, 31 மற்றும் பிப்.1 ஆகிய மூன்று நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடக்கவுள்ளது.
இந்தாண்டு கண்காட்சியில் புதிய ரகமாக இம்பேஷன், கைலாடியா, பையர்பால் ஆகியவை உள்பட 25 வகையான மலர் செடி வகைகளில், காண்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் 40 ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக லாஸ்பேட்டை வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு நர்சரியில் கடந்த ஒரு மாதமாக இந்த செடிகளை உருவாக்கும் பணியில் நர்சரி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பூக்கள் பூத்து குலுங்கும் நேரத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பெய்த திடீர் மழையில் மலர்கள் பாழாகாமல் பாதுகாத்து, தாவரவியல் பூங்காவிற்கு அனுப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இதில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 40 ஆயிரம் மலர் செடிகளை வெறும் ரூ.7 லட்சம் செலவில் நர்சரி ஊழியர்கள் உற்பத்தி செய்து அசத்தியுள்ளனர்.
மேலும் இந்தாண்டு ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஆகியவை ஸ்டால்களில் இடம் பெற உள்ளதால், இதற்கான பணிகளை வேகமாக வேளாண் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மலர் விரும்பிகளே கண்காட்சியை காண தயாராகுங்கள்.

