/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் 4.45 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
/
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் 4.45 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் 4.45 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் 4.45 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
ADDED : ஆக 27, 2025 07:02 AM
புதுச்சேரி : லட்சுமி நாராயணா மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 4.45 கிலோ கருப்பை கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.
புதுச்சேரியை சேர்ந்த 37 வயது பெண் வயிற்றில் வலி காரணமாக லட்சுமி நாராயண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மகளிர் நல டாக்டர்கள், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மற்றும் புற்றுநோய் குறிப்பான்கள் சோதனை மூலம் மிகப் பெரிய கருப்பை கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
கல்லுாரியின் முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் அசையாஸ் போஸ்கோ சந்திரகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மகளிர் நல மருத்துவத்துறை தலைவர் அமுதா தலைமையில் டாக்டர் துர்கா, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து 4.45 கிலோ எடை கொண்டகருப்பை கட்டியை, கருவுறுதல் காக்கும் அறுவை சிகிச்சை முறையில் அகற்றினர்.
சாதனை புரிந்த மருத்துவ குழுவினரை, மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்விக் குழும தலைவர் சந்திப் ஆனந்த் ஜெகத்ரட்சகன் ஆகியோர் பாராட்டினர்.
இதுகுறித்து லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரியின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பு கூறுகையில், 'மருத்துவமனையில் அனைத்து உயர் சிறப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை மிகக் குறைந்த செலவிலும், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் மூலமாக இலவசமாகவும் அளிக்கப்படுகிறது' என்றார்.