காரைக்காலில் 'டெங்கு' காய்ச்சல்: 4 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
காரைக்காலில் 'டெங்கு' காய்ச்சல்: 4 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
UPDATED : செப் 29, 2026 06:01 PM
ADDED : செப் 29, 2026 05:52 PM
காரைக்கால்: காரைக்காலில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பேர் அரசு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நிரவி, அக்கரைவட்டம் மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்ட நிரவி அக்கரைவட்டம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் நலவழித்துறை துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் மாவட்ட மலேரியா அதிகாரி தேனாம்பிகை, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் ஆகியோர் கொண்ட மருந்துவக்குழுவினர் வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர் மற்றும் வீடுகள் சுற்றுப்புறங்களில் தேங்கியிருந்த நீரில் ஏடீஸ் கொசு புழுக்கள் உள்ளதா என கண்டறிந்து அழித்தனர்.
