தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு பட்டிமன்றம்  

பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு பட்டிமன்றம்  

பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு பட்டிமன்றம்  


ADDED : செப் 29, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடந்த சிறப்பு பட்டிமன்றத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

 புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறையின் செய்தி, கல்வி மற்றும் தொடர்புப் பிரிவு, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி   தமிழ்த்துறை மற்றும் கல்லுாரி உள்தர மதிப்பீட்டு உறுதியளிப்புக் குழு ஆகியவை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்புப் பட்டிமன்றம் கல்லுாரி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

 தமிழ்த்துறை மாணவி கிருத்திகா வரவேற்றார். கல்லுாரி உள்தர மதிப்பீட்டு உறுதியளிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது நோக்கவுரையாற்றினார்.  கல்லுாரி முதல்வர் மதிவாணன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக செல்வம் குழுவினரின் இன்னிசைப் பாடல்கள் இடம்பெற்றது.

சிறப்பு பட்டிமன்றம்: 

சுகாதார நெறிமுறைகளைப் பெரிதும் பின்பற்றுபவர்கள் நகரத்தினரா? கிராமத்தினரா? என்ற தலைப்பில் நடந்த சிறப்பு பட்டி மன்றத்திற்குத் தமிழ்த்துறைத் தலைவர் கிருங்கை சேதுபதி நடுவராகப் பொறுப்பேற்றார்.

அணிகள் வாதம்:

 சுகாதார நெறிமுறைகளைப் பெரிதும் பின்பற்றுபவர்கள் நகரத்தினரே என்ற தலைப்பில் கவிஞர் அமலோற்பவமேரி மற்றும் தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி ஆகியோர் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர். சுகாதார நெறிமுறைகளைப் பெரிதும் பின்பற்றுபவர்கள் கிராமத்தினரே என்ற தலைப்பில் விரிவுரையாளர் பூங்குழலி பெருமாள் மற்றும் தமிழ்த்துறை மாணவி  காவ்யா ஆகியோர் வாதாடியதுடன்.   மாணவி மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.  மாணவி தேவதர்ஷினி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us