/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலையில் இயந்திர உதிரிபாகங்கள் திருடிய 5 பேர் கைது
/
திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலையில் இயந்திர உதிரிபாகங்கள் திருடிய 5 பேர் கைது
திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலையில் இயந்திர உதிரிபாகங்கள் திருடிய 5 பேர் கைது
திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலையில் இயந்திர உதிரிபாகங்கள் திருடிய 5 பேர் கைது
ADDED : நவ 25, 2024 05:39 AM

திருபுவனை: திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஷட்டரை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான இயந்திர உதிரிபாகங்கள் திருட்டுபோன வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி திருபுவனை நான்கு வழிச்சாபையில், புதுச்சேரி அரசு சொந்தமான கூட்டுறவு நுாற்பாலை உள்ளது. இது கடந்த 2022 ஜூன் 8ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 23ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம ஆசாமிகள் நுாற்பாலையின் பின்பக்க ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புடைய இயந்திர உதிரி பாகங்களை திருடிச் சென்றனர்.
நுாற்பாலையின் அதிகாரி பன்னீர்செல்வம் புகாரின்பேரில் திருபுனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருவாண்டார்கோயில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பைக் சென்ற இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதகடிப்பட்டுபாளையம் கஸ்துாரிபாய் நகரை சேர்ந்த ஞானவேல் மகன் பிரகாஷ் 36; திருபுவனைபாளையம் சீனிவாசா நகர் முருகன் மகன் உத்ரா 30; என்பதும் கூட்டாரிகள் 3 பேருடன் சேர்ந்து ஸ்பின்கோ நுாற்பாலையில் பின்பக்க ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து இயந்திர உதிரி பாகங்களை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவர் அளித்த தகவலின் பேரில் கண்டமங்கலம் அடுத்த சாரம் புதுப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேரந்த தமிழ்மாறன், 42; திருவாண்டார்கோயில் சின்னபேட் சூர்யா (எ) வினோத்குமார் 32, திருபுவனைபாளையம் பிள்ளையார்கோயில் வீதி மணிகண்டன் (எ) கேடிமணிகண்டன் 26; ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான இயந்திர உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்.