ADDED : நவ 26, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், மது போதையில் தகராறு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகே மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த வானுரை சேர்ந்த பரசுராமன், 49; டி.நகர் போலீசார் கைது செய்தனர். அதே போல, சேதராப்பட்டு தொழிற்சாலை பகுதியில், தகராறு செய்த, வானுரை சேர்ந்த பாலன், 51, சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
மேலும், முத்தியால்பேட்டையில், தகராறு செய்த, கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜோசப், 40, என்பவரை, முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். வில்லியனுாரில், தகராறு செய்த, அருபார்த்தபுரத்தை சேர்ந்த கருணாகரன், 30, என்பவரை, வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.

