/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை மிரட்டும் 5 சுற்றுச்சூழல் பிரச்னைகள் மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேச்சு

ADDED : அக் 31, 2025 02:13 AM

புதுச்சேரி:  தனி நபர் தண்ணீரின் உபயோகம் புதுச்சேரியில் ஆண்டிற்கு இரண்டு லட்சம் லிட்டராக உள்ளது என, புதுச்சேரி மாசுக் கட்டுப் பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசினார்.
காஞ்சிமாமுனிவர் முதுகலை கல்லுாரியில், துய்மையான உலகம் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. சிறப்பு அமர்வில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:
புதுச்சேரி ஐந்து முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைதல், கடல்நீர் குடிநீரில் கலப்பது, நகரப்பகுதியில் காற்றின் தரம் குறைவது, திடக்கழிவு மேலாண்மை, பசுமை பரப்பு குறைதல் ஆகியவை இதில் அடங்கும்.
தேசிய தண்ணீர் கொள்கையின்படி மொத்த நீர் தேவையில் 50 சதவீதம் மட்டும் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும். 25 சதவீதம் ஏரி மற்றும் 15 சதவீதம் கடல்நீரை குடிநீராக மாற்றுதல் மற்றும் 10 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பயன்படுத்த வேண்டும்.
தற்போது, புதுச்சேரியின் அனைத்து பயன்பாட்டிற்கும் நுாறு சதவீதம் நிலத்தடி நீரையே பயன்படுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் குடிநீரில் உட்புகுந்து உள்ளது.
தனிநபர் தண்ணீரின் உபயோகம் புதுச்சேரியில் ஆண்டிற்கு இரண்டு லட்சம் லிட்டர் ஆகும். தேசிய அளவில் இது மிக அதிகம்.
அனைவரும் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை சிக்கனமாக பயன்படுத்த பழக வேண்டும்.
புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 50 மில்லியன் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் இலவசமாக கிடைக்கிறது. இதனை பயன்படுத்த தொழிற்சாலைகள் முன் வரவேண்டும்.
நகரப்பகுதிகளில் காற்றின் தரம் குறைவதற்கு போக்குவரத்து வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றிக்கு ஒரே தீர்வு மின்சார வாகனங்கள்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.