/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ.1.60 லட்சம் மோசடி
/
5 பேரிடம் ரூ.1.60 லட்சம் மோசடி
ADDED : பிப் 21, 2026 05:09 AM
புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் பேஸ்புக்கில் ஏர் இந்தியா உறுப்பினர் அட்டை பதிவு தொடர்பா க விளம்பரத்தை பார்த்தார்.
இதையடுத்து, அதிலிருந்த எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், ஏர் இந்தியா உறுப்பினர் அட்டை பதிய, வாட்ஸ் ஆப் வரும் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை பதிவிடும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவருக்கு வந்த மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பதிவிட்ட சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது.
இதேபோல், நெல்லித் தோப்பை சேர்ந்தவர் 11 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்தவர் 7 ஆயிரத்து 400, தவளக்குளத்தை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 600, சண்முகாபுரத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 850 என, மொத்தம் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 650 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

