/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி
/
5 பேரிடம் ரூ. 9.19 லட்சம் மோசடி
ADDED : ஆக 07, 2025 11:08 PM
புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.9.19 லட்சம் ஏமாந்தனர்.
உருளையன்பேட்டையை சேர்ந்த நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 7 லட்சத்து 59 ஆயிரத்து 430 முதலீடு செய்து ஏமாந்தார்.
இதேபோல், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து 80 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்த நபர் 36 ஆயிரம், வில்லியனுார் நபர் 40 ஆயிரத்து 194, கிருமாம்பாக்கம் நபர் 3 ஆயிரத்து 500 என, மொத்தம் 5 பேர் மோசடி கும்பலிடம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 124 ரூபாய் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.