தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது 

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது 

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது 


ADDED : செப் 07, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: செட்டிப்பட்டில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு காலனி, கெங்கையம்மன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  

அப்போது, போலீசாரை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில், அதே கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த காமராஜ், 31; கலைதேவன், 31; அருணாகிரி, 34; ரமேஷ், 50; சுபாஷ், 28; என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ.740 பணத்தை பறிமுதல் செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us