ADDED : நவ 26, 2026 08:11 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று (நவ.,25) கால்நடை மருத்துவமனை அருகில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையம் பூபாலன், 30, என்பவரை கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று மேரி உழவர்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணபதி மெயின் ரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த கிருமாம்பாக்கம் அன்பரசு, 35, என்பவரை கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று பெரியகாலாபட்டு இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். தனியார் கம்பெனி அருகில் பொது இடத்தில் ரகளை செய்த உளுந்துார்பேட்டை ரமேஷ் என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று உப்பளம் அம்பேத்கர் சாலையில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த தொண்டமாநத்தம் சிவராமன்,49, என்பவரை கைது செய்தனர்.
மாகே போலீசார் நேற்று மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளை செய்த எர்ணாகுளம் மனோஜ்,37; என்பவரை கைது செய்தனர்.
