ADDED : அக் 13, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெட்டி கடைகளில் போதைப் பொருளான குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டையில், பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா விற்பனை செய்வதாக, முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.
கடையில் குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதையடுத்து, டி.வி., நகரை சேர்ந்த மோகன்ராஜ், 33; என்பவரை போலீசார் கைது செய்தனர்.அதே போல, சின்ன காலாப்பட்டு, பெட்டி கடைகளில் குட்கா விற்ற அப்பகுதியை சேர்ந்த ரகுநாதன், 50; சாமிபிள்ளை தோட்டம் குமார், 60; நெல்லித்தோப்பு சதீஷ்குமார், 30; உப்பளம் ராமு, 54; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.