ADDED : செப் 11, 2026 09:11 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம் எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் 32, என்பவர் மதுபோதையில் மடுகரை-தொந்திரெட்டிப்பாளையம் முருகன் கோவில் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுப்பட்டார்.
அந்த பகுதிக்கு ரோந்து சென்ற போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் கரிக்கலாம்பாக்கத்தில், ராஜபாண்டியன் 37, சேதாரப்பட்டு பகுதியில் மணிகண்டன் 28, திருபுவனையின் தமிழரசன் 23, வில்லியனுாரில் கார்த்திக்கேயன் 32, ஆகியோர் ரகளையில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய் தனர்.
