ADDED : செப் 11, 2026 09:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக்கு மதுகுடித்துவிட்டு வந்த மாணவிகளால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பறையில் 3 மாணவிகள் இருக்கையில் இருக்க முடியாமல் தள்ளாடிய படி இருந்தனர். இதை பார்த்த ஆசிரியை மாணவிகளின் நடவடிக்கையில் மாற்றம் உணர்ந்து அருகில் சென்றார்.
அப்போது மாணவிகள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியை பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவி களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளிக்கு வரவழைத்தனர். மாணவிகள் போதையில் இருந்ததை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந் தனர்.
மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் விளக்கம் கடிதம் எழுதி வாங்கினர்.
அதில் வரும் 14ம் தேதி வரை 3 மாணவிகள் பள்ளிக்கு வரவேண் டாம் என்று அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த 3 மாணவி களையும் நகர பகுதி யில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிக்கு மாணவிகள் மதுகுடித்து வந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
