/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி., தொற்று
/
5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி., தொற்று
ADDED : ஜன 13, 2025 06:44 AM
புதுச்சேரி : ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர் காய்ச்சல், சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன், கோரிமேடு ஜிப்மர் குழந்தைகள் வார்டு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரின் தொண்டை நீர்திவலைகளை 'ஆர்டி-பிசிஆர்' (கொரோனாவிற்கு பயன்படுத்திய ஆய்வு முறை) முறையில் ஆய்வு செய்ததில் அவருக்கு எச்.எம்.பி.வி., (ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) தொற்று பாதிப்பு உள்ளது நேற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எச்.எம்.பி.வி.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுவன் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இரண்டாவதாக ஐந்து வயது சிறுமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.