sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு; தமிழகம் வருகிறது ரயில்வே அதிகாரிகள் குழு

/

நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு; தமிழகம் வருகிறது ரயில்வே அதிகாரிகள் குழு

நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு; தமிழகம் வருகிறது ரயில்வே அதிகாரிகள் குழு

நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு; தமிழகம் வருகிறது ரயில்வே அதிகாரிகள் குழு

6


ADDED : பிப் 14, 2026 10:42 PM

Google News

6

ADDED : பிப் 14, 2026 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண, ரயில்வே அதிகாரிகள் குழு, மாநில அரசுடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில், 24 சதவீதம் மட்டுமே ரயில்வேயிடம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதாவது, 4,326 ஹெக்டேரில், 1,052 ஹெக்டேர் மட்டும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க, ரயில்வே அதிகாரிகள் குழு மாநில அரசுடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்துக்கான ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற, மாநில அரசின் பங்களிப்பு அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் மட்டுமே பல்வேறு ரயில் அகலப்பாதை, புதிய பாதை திட்டங்கள் தாமதமாக நடக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளோம்.

அதுபோல், தற்போதுள்ள ரயில்வே கேட்டுகளை நீக்கி, அங்கு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பது குறித்து பேச உள்ளோம். இது தவிர, மேம்பால ரயில் பாதையை மெட்ரோவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் இதர ரயில் திட்டங்கள் குறித்தும் பேச முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us