UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் காணாமல் போன ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 50 மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கோவில் திருவிழா மற்றும் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் மாயமான மொபைல் போன்களை மீட்டு தர வேண்டும் என, மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பொது மக்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பல்வேறு இடங்களில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 50 மொபைல் போன்களை மீட்டனர்.
பின், நேற்று மகளிர் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., வினய் குமார் காட்கே முன்னிலையில், உரியவர்களிடம் மொபைல் போன்கள் ஒப்படைக்கப்பட்டன.
