UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:15 PM

புதுச்சேரி: சர்க்கிள் டி பாண்டிச்சேரி ஸ்போர்ட்ஸ், சோஷியல் அன்ட் கல்ச்சுரல் கிளப் சார்பில் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
'நாளைய சிற்பிகளை பராட்டி கவுரவித்தல்' என்ற தலைப்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், கிளப் தலைவர் சதானந்தன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் டாக்டர் லட்சுமிபதி, சிவகுமார், செயலாளர் கனகராஜ், விளையாட்டுச் பிரிவு செயலாளர் மேத்யூஸ், பொருளாளர் முத்துராஜ், உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, வினாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் செல்வம் கலந்து கொண்டு, சாதனை படைத்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், கல்விப் பணியையும் பாராட்டி கவுரவிக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தின் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணியாற்றி வரும் 13 ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் கல்லுாியைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் என மொத்தம் 15 கல்வியாளர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் வெள்ளி மடல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், கிளப் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
