/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்காலில் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
புதுச்சேரி, காரைக்காலில் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
புதுச்சேரி, காரைக்காலில் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
புதுச்சேரி, காரைக்காலில் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 27, 2025 07:40 AM
புதுச்சேரி :புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பொது வெளிகளில் 500 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இந்து முன்னணி மாநில செயலாளர் மணிவண்ணன் அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாத்திக இருளை அகற்றி தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் பரப்பும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியெங்கும் கொண்டாட, ராமகோபால் முயற்சி எடுத்தார். அதன்பலனாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 41 ஆண்டுகளாக இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளை புறம் தள்ளி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு பொதுவெளியில் ஒற்றுமையாக ஊர்வலமாக செல்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழா முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற பெயரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களை பாதுகாத்து, மேம்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூன்றடி முதல் 21 அடி வரை உயரமுள்ள 500 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால், காலாப்பட்டு மற்றும் தவளக்குப்பம் பகுதிகளில் இன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வரும் 29ம் தேதி அந்தந்த பகுதி கடற்கரைகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி நகரப் பகுதியில் பிரதிஷ்டை செய்துள்ள விநாயகர் சிலைகள் வரும் 31ம் தேதி சாரம் அவ்வை திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று, கடற்கரை சாலை காந்தி சிலை அருகே 108 விநாயகர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி காட்டி கடலில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.