/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாய்ப்பு முகாம் 550 பேர் தேர்வு
/
வேலை வாய்ப்பு முகாம் 550 பேர் தேர்வு
ADDED : பிப் 06, 2024 06:46 AM

புதுச்சேரி : வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 550 படித்த இளைஞர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முத்தியால்பேட்டை வாசவி இன்டர் நேஷனல் பள்ளியில், தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா, புதுச்சேரி ஆரிய வைசிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஈக்வேடாஸ் வளர்ச்சி முகமை, அறக்கட்டளை இணைந்து நேற்று வேலை வாய்ப்பு முகாமை நடத்தின.
முகாமை, செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். முகாமில், 80க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், 550 படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலையில் தேர்வாகி உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை, தமிழ்நாடு, ஆரிய வைசிய மகாசபா தலைவர் ராமசுப்பிரமணி,வாசவி இன்டனர்நேஷனல் பள்ளி தலைவர் வேணுகோபால், பொருளாளர் சற்குருநாதன், மாவட்ட தலைவர் தயானந்தகுப்தா ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.