ADDED : ஜூலை 03, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கலால் அதிகாரிகள் நேற்று 2ம் நாளாக சோதனை நடத்தி 56 சாராயக் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் சாராயக்கடைகளின் குத்தகை காலம் கடந்த 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் கடைகளை கண்டறிய கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் விதிகளை மீறிய 16 சாராயக்கடைகளைக் கண்டறிந்து, சீல் வைத்து, 4 பேரை கைது செய்தனர்.
இரண்டாம் நாளாக நேற்று தாசில்தார்கள் ராஜேஷ்கண்ணா மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் முடிவில் 56 சாராயக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
