ADDED : மே 31, 2025 05:16 AM
பாகூர்,: புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக கடந்த 24ம் தேதி சென்ற அசோக் லேலண்ட் தோஸ்த் லோடு வாகனம், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனை எதிரே சென்ற போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி, அருகே சென்ற பைக் மீது மோதி, இரண்டு பைக்குகளும் கீழே விழுந்தன.
அதில், ஸ்கூட்டியில் சென்ற தவளக்குப்பத்தைச் சேர்ந்த கவியரசி 32; அவரது மகன்கள் ஜோயல் ரோமல்ஸ், 9; தெறி தில்சன், 12; மற்றும் அர்சுனன் 59, மற்றும் பைக்கில் சென்ற கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த நாகமுத்து 46 உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர்.
அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கிருமாம் பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவர் பெரம்பலுார் மாவட்டம், சத்திரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர்.