/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொள்ளை அடிக்க திட்டம்; காரைக்காலில் 6 பேர் கைது
/
கொள்ளை அடிக்க திட்டம்; காரைக்காலில் 6 பேர் கைது
ADDED : மே 27, 2025 11:33 PM

காரைக்கால்; காரைக்கால் அருகே கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், டி.ஆர்.பட்டினம் போலகம், கட்டப்பிள்ளை மரைக்கார் தோட்டம், 6வது குறுக்குத் தெருவில் உள்ள காலி இடத்தில் ஒரு குழுவினர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காரைக்கால் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள முட்புதர் பகுதியில் பதுங்கி இருந்த 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், டி.ஆர்.பட்டினம், போலகம் கட்டப்பிள்ளை மரைக்காயர் தோட்டத்தை சேர்ந்த அர்னால்ட் (எ) சித்திரைசெல்வன், 19; அரவிந்தன், 20; சிவகங்கை மாவட்டம், இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீதர், 18; மேனாட்டூர், கீழத்தெருவை சேர்ந்த தினேஷ், 20 மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களிடம் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கத்திகள், 4 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.