/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பெண் உட்பட 6 பேரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி
/
3 பெண் உட்பட 6 பேரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 03, 2025 12:47 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.40 லட்சம் இழந்துள்ளனர்.
வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவரின், கிரெடிட் கார்டில் இருந்து மர்மநபர் 76 ஆயிரத்து 564 ரூபாய்க்கு, அவரின் அனுமதியின்றி ஆன்லைனில் மொபைல் வாங்கி மோசடி செய்தார்.
தவளக்குப்பத்தை சேர்ந்த நபர், நியூசிலாந்து நாட்டில் வேலை இருப்பதாக பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின், அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், விசா மற்றும் வேலை அனுமதி கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, 4 ஆயிரத்து 200 அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 21 ஆயிரம், ரெட்டியார்பாளையம் நபர் 30 ஆயிரம், உருளையன்பேட்டை பெண் 5 ஆயிரத்து 699, சஞ்சீவி நகர் நபர் 3 ஆயிரம் என 6 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 463 ரூபாய் ஏமாந்தனர்.
புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.