/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதால் கொலை வில்லியனுாரில் ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
/
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதால் கொலை வில்லியனுாரில் ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதால் கொலை வில்லியனுாரில் ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதால் கொலை வில்லியனுாரில் ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
ADDED : ஜன 28, 2026 05:51 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே உறவினர் பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய வாலிபரை அடித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வில்லியனுார் அடுத்த ஆத்துவாய்க்கால் பேட்டை சேர்ந்த பிரபாகரன் - கஸ்துாரி தம்பதி மகன் ஜனா, 21; கடந்த 25ம் தேதி இரவு திருவேணி நகர் மந்தவெளியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸ் விசாரணையில், வீட்டில் இருந்த ஜனாவை, நடராஜன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிவா (எ) சிவபாலன், 22; பைக்கில் அழைத்து சென்றது தெரிய வந்தது.
ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், தனது உறவினர் பெண்ணுக்கு ஜனா ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதை கூறி வருத்தப்பட்டார்.
மேலும் தனது நண்பர்களை கத்தியால் வெட்டிய வழக்கில் ஜனா சிறைக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதற்கு பழிவாங்கும் வகையில் சமாதனம் பேசுவதாக அழைத்து சென்று ஒன்றாக மது அருந்திய போது திட்டமிட்டு பாட்டிலால் ஜனாவின் தலையில் அடித்தும், கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கொலையில் தொடர்புடைய நடராஜன் நகர் வரதராசு மகன் மணி(எ) சுடுகாட்டு மணி, 24; ராஜாராம் மகன் எழிலரசன், 24; அரும்பார்த்தபுரம் வசந்த நகர் முருகன் மகன் முரளி, 24; ஜி.என் பாளையம் லுார்த்துசாமி மகன் அருள்,23; மற்றும் மணி மகன் விக்னேஷ்,23; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் எழிலரசன், விக்னேஷ் மற்றும் அருள் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

