ADDED : செப் 04, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். ஒழிந்தியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்துரு, 21, என்பவர் மது போதையில் கனகசெட்டிக்குளம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்ளை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டனர். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் காட்டேரிக்குப்பம் பகுதியில் ரகளை செய்த ரங்கநாதபுரம் முருகன், 47; ஆதனப்பட்டு முத்தழகன், 40; திருக்கனுாரில் ராஜ்குமார், 18; கொடுக்கூர் ரவி, 32; கொணமங்கலம் சரண்ராஜ், 30, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
