ADDED : செப் 04, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக தயானந்த் தெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் பொறுப்புகளை அமன் சர்மா வகித்து வந்தார். இதற்கிடையே, சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லுாரிகளின் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து அமன் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வருவாய்த் துறை வடக்கு பகுதி துணை கலெக்டராக பணியாற்றி வந்த தயானந்த் தெண்டுல்கர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.
