ADDED : செப் 04, 2026 05:52 PM
புதுச்சேரி: திருக்கனுார் அருகே வீட்டு கதவை உடைத்து 6 சவரன் தங்க நகைகள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கே.மணவெளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள், 44. தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் திவ்யா திருமணம் கடந்த 31ம் தேதி நடந்தது. இதற்காக மாப்பிள்ளை வீட்டார் 5 சவரன் நகை கொடுத்தனர்.
கடந்த 2ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கு முன், மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த தங்க நகைகளை வீட்டில் வைத்து விட்டு வழக்கம் போல் சாவி வைக்கும் இடத்தில் வீட்டு சாவியை வைத்துவிட்டு சென்றனர்.
பின் வரவேற்பு முடிந்து 3ம் தேதி மாலை வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 6 சவரன் நகைகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
