/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.6,003 கோடிக்கு ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள்: கவர்னர், முதல்வர் தலைமையில் ஆலோசனை
/
ரூ.6,003 கோடிக்கு ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள்: கவர்னர், முதல்வர் தலைமையில் ஆலோசனை
ரூ.6,003 கோடிக்கு ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள்: கவர்னர், முதல்வர் தலைமையில் ஆலோசனை
ரூ.6,003 கோடிக்கு ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள்: கவர்னர், முதல்வர் தலைமையில் ஆலோசனை
ADDED : அக் 18, 2024 11:26 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு உலக வங்கி உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
உலக வங்கி உதவியுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
கருத்தரங்க கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினர். புதுச்சேரி கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் ரூ. 1,433 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுக்சூழல் துறையால் முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலை இணைப்பு கட்டமைப்பை மேம்படுத்த பொதுப்பணித்துறை மூலமாக ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 4,570 கோடி செலவில் செயல்படுத்தபடவுள்ள திட்டம் ஆலோசிக்கப்பட்டது.
தொழில்துறை மூலமாக பிரதம மந்திரி ஒற்றுமை வணிக வளாக திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள வணிக வளாகம் மற்றும் சேதராப்பட்டு கரசூர் தொழிற்பேட்டையை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், சரவணன்குமார், திருமுருகன் பங்கேற்றனர். தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசுச் செயலர்கள் ஜவஹர், முத்தம்மா, ஜெயந்த குமார் ரே, கேசவன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உட்பட துறைகளின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், மாகி மண்டல நிர்வாகி மோகன்குமார் மற்றும் ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

