/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.60.38 கோடியில் சா லைப்பணி அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைப்பு
/
ரூ.60.38 கோடியில் சா லைப்பணி அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைப்பு
ரூ.60.38 கோடியில் சா லைப்பணி அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைப்பு
ரூ.60.38 கோடியில் சா லைப்பணி அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைப்பு
ADDED : பிப் 18, 2025 06:29 AM

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத் தில் ௫ சட்டமன்ற தொகுதி களில் ரூ.60.38 கோடி மதிப்பில் சாலைப்பணிகளுக்கான பூமி பூஜையை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கிவைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.60.38 கோடி மதிப்பில் சாலைப்பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் முன்னிலை வகித்தார். இதில் காரைக்கால் வடக்கு தொகுதி, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் சாலை பணி, காரைக்கால் தெற்கு தொகுதி, நிரவி திருப்பட்டினம் தொகுதி சாலை பணி.
திருநள்ளாறு தொகுதியில் தென்னங்குடி சேத்துார் இணைப்பு, கீழாவூர், கருக்கன்குடி இணைப்பு சாலைபணி, வடக்கு உள்வட்ட சாலை பணிகள் என மொத்தம் 60.38 கோடி ரூபாய் மதிப்பில் நபாடு வங்கி நிதி உதவியுடன் சாலைப் பணிக்கு பூமிபூஜையை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சிவா, சந்திரபிரியங்கா, நாகதியாகராஜன், கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நிர்வாகப்பொறியாளர் சிதம்பரநாதன், மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

