/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்
/
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம்
ADDED : ஆக 21, 2025 11:45 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 67வது பொதுப் பேரவை கூட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை நுாறடி சாலையில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுப்பேரவை கூட்டத்திற்கு, உதவி பொது மேலாளர் குணசேகரன் வரவேற்றார்.
வங்கியின் நிர்வாகி யஸ்வந்தய்யா 2024-25ம் நிதியாண்டிற்குரிய ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, வங்கியின் மேலாண் இயக்குநர் குமரன், தணிக்கை அறிக்கையும், 2025-26ம் நிதியாண்டிற்கான உத்தேச வரவு - செலவு திட்ட அறிக்கை வாசித்தார்.
மேலும்,பேரவையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் வரவு, செலவு திட்டங்களுக்கு பொதுப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், உதவி பொது மேலாளர் திருமால்முருகன், கூட்டுறவு துறை அதிகாரிகள், வங்கியின் உறுப்பினர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உதவி பொது மேலாளர் ரவீந்திரராஜ் நன்றி கூறினார்.