/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஏப் 27, 2025 04:45 AM

புதுச்சேரி : மக்கள் நீதிமன்றத்தில், 7 வழக்குகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார்.
உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து 10 வழக்குகள் சமாதானத்திற்கானது என, கண்டறியப்பட்டது.
அதில், பேச்சுவார்த்தை மூலம், 7 வழக்குகள் உடன் படிக்கை ஏற்பட்டு, தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து, மாநில தலைமை நீதிபதி, ஆனந்த், பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் நீதிபதி தாமோதரன், தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார், மாவட்ட நீதிமன்ற சிறப்பு அதிகாரி கிரிஸ்டியன், 2வது குற்றவியல், நீதித்துறை நடுவர் ரமேஷ் பங்கேற்றனர்.
மேலும், வழங்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் நாராயணகுமார் உட்பட மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தின் மூலம், 5.75 லட்சம் ரூபாய் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

