/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த 7 ரவுடிகள் சிறையில் அடைப்பு
/
கத்தியுடன் திரிந்த 7 ரவுடிகள் சிறையில் அடைப்பு
ADDED : மார் 21, 2024 07:50 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் போலீஸ் சோதனையின்போது கத்தியுடன் திரிந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பையொட்டி, ஆப்ரேஷன் திரிசூல் மூலம் ரவுடிகளின் வீடுகளில் நேற்று காலை திடீரென சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் கத்தியுடன் நின்றிருந்த நைனார்மண்டபம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த தரணி (எ) தரணிதரன், 23; வேல்ராம்பட்டு எல்லையம்மன் கோவில் வீதி சஞ்சீவி, 19; முதலியார்பேட்டை உடையார்தோட்டம், ஏழை முத்துமாரியம்மன் கோவில் வீதி மணிமாறன், 22; ஆகியோரை கைது செய்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல், மேட்டுப்பாளையம் சாணரப்பேட் ஐ.டி.ஐ., சாலையில் கத்தியுடன் நின்றிருந்த மேற்கு வீதியைச் சேர்ந்த பிரதீஷ், 19; என்பவர் கைது செய்யப்பட்டார்.
மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் ரயில்பாதை அருகே கத்தியுடன் திரிந்த பாம் மணி (எ) மணிகண்டன், 31; பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் கத்தியுடன் திரிந்த ரெட்டியார்பாளையம் லெம்பார்ட் சரவணன் நகர் சூர்யா, 28; கம்பன் நகர் மெயின்ரோட்டைச் சேர்ந்த சூசை (எ) மொட்ட சூசை, 35: ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது. ஏழு ரவுடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

