/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 7.5 செ.மீ., மழை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
/
புதுச்சேரியில் 7.5 செ.மீ., மழை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரியில் 7.5 செ.மீ., மழை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரியில் 7.5 செ.மீ., மழை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ADDED : நவ 27, 2024 11:28 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று மாலை வரை 7.5 செ.மீ., மழை பதிவானது. துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டது.
வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்ததால், கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நேற்று பள்ளி கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அளித்தது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 10:00 மணி வரை மட்டுமே லேசான மழை இருந்தது. அதன் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை 7.2 செ.மீ., மழை பதிவானது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 3.6 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலை வரை மொத்தம் 7.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக புதுச்சேரி கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இறங்கி விளையாட போலீசார் அனுமதி மறுத்தனர்.புதுச்சேரி துறைமுகத்தில் மோசமான வானிலை என்பதை குறிக்கும்3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.