/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,963 பேர் பங்கேற்பு
/
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,963 பேர் பங்கேற்பு
ADDED : மார் 05, 2024 04:49 AM
அரசு பள்ளிகள் தேர்வில் பங்கேற்கவில்லை
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. 7,963 பேர் பங்கேற்று மொழிப்பாட தேர்வு எழுதினர். அரசு பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தியதால், அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுத செல்வில்லை.
புதுச்சேரி அரசு நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றியது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. அதைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதற்காக புதுச்சேரியில் 31 தேர்வு மையமும், காரைக்காலில் 9 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று மொழிப்பாடம் தமிழ், சமஸ்கிருதம், பிரஞ்ச், இந்தி, ஆராபிக் தேர்வு நடந்தது. இதில், புதுச்சேரியில் 6,988 பேரில் 6,962 பேர் தேர்வு எழுதினர். காரைக்காலில் 730 பேரில் 701 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 99 பேரும், கடந்த ஆண்டு தோல்வியுற்று இந்தாண்டு 201 பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக புதுச்சேரி முழுதும் 7,963 பேர் நேற்றைய தேர்வில் பங்கேற்றனர். 139 பேர் தேர்வு எழுத வரவில்லை.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு கிடையாது.
இதனால் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று தேர்வு எழுத செல்லவில்லை.

