ADDED : நவ 12, 2026 04:21 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று (நவ.,11) பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூலகுளம் ஜெ.ஜெ., நகர் பகுதியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய மூலகுளம் அந்தோணி மகன் கிதியோன்,22; பூமியான்பேட்டை குண்டுசாலையில், டி.என்.பாளையம் வீரையன் மகன் ஹரிஷ்,22; மூலகுளம் என்எஸ்சி போஸ் நகரில் டி.என்.பாயைளம் பூபாலன் மகன் நித்தீஷ்,25; மூலகுளம் ரயில்வேகட் அருகில் அபிேஷகப்பாக்கம் வீராசாமி மகன் பிரதீப்,19; உழவர்கரை வயல்வெளி வீதியில் டி.என்.பாளையம் வீரப்பன் மகன், அருள்பிரதீப்,19; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், வாணரங்பபேட்டை ராசு உடையார் தோட்டத்தில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாணரப்பேட்டை சுகு மகன் பரத்,23; செல்வராஜ் மகன் சஞ்சீவி,22; சார்லஸ் சரவணன் மகன் ஹரிஹரன் ஆகியோர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
