திண்டுக்கல் வேணு பிரியாணி புதுச்சேரியில் இன்று திறப்பு
திண்டுக்கல் வேணு பிரியாணி புதுச்சேரியில் இன்று திறப்பு
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 04:28 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் திண்டுக்கல் வேணு பிரியாணி புதிய கிளையை தினமலர் வெளியீட்டாளர் வெங்கட்ராமன் இன்று (13ம் தேதி) திறந்து வைக்கிறார்.
திண்டுக்கல்லில் 1953ம் ஆண்டு முதல் பாரம்பரிய சுவையுடன் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற வேணு பிரியாணி உணவகம், தனது புதிய கிளை பல்வேறு பகுதிகளில் திறந்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள 53 மற்றும் 55ம் எண் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வேணு பிரியாணி புதிய கிளையின் திறப்பு விழா இன்று (13ம் தேதி) காலை 9:15 மணிக்கு நடக்கிறது. விழாவில், சிறப்பு விருந்தினராக தினமலர் நாளிதழின் புதுச்சேரி வெளியீட்டாளர் வெங்கட்ராமன் பங்கேற்று, புதிய கிளையை திறந்து வைக்கிறார்.
திண்டுக்கல் வேணு பிரியாணி நிறுவனம் தனது பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் தனித்துவமான சுவையுடன் புதுச்சேரியில் தனது சேவையை துவங்க உள்ளதால், உணவுப் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிறுவனத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
