UPDATED : அக் 25, 2026 05:26 PM
ADDED : அக் 25, 2026 05:24 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், ஐ.டி.ஐ., அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய முத்திரையார்பாளையத்தை சேர்ந்த பாலாஜி, 40; என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம், தனியார் ஒயின்ஷாப் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதலியார்பேட்டையைச் சேர்ந்த கணேசன், 42; என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
கணபதிசெட்டிக்குளம், பிம்ஸ் மருத்துவமனை சாலையில் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மரக்காணத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 51; என்பவரை காலாப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
சந்தை புதுக்குப்பம், பெட்ரோல் பங்க் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பெரும்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், 47; என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
கே.ஆர்.பாளையம், புளியந்தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திருவக்கரையை சேர்ந்த ஜெகதீஷ், 30; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம், மடுகரை மெயின் ரோட்டில் தனியார் ஒயின்ஷாப் அருகே போதையில் ரகளை செய்த கடலுார், சிங்கிரி கோவில் பகுதியை சேர்ந்த சிவா, 48; என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை, அம்பேத்கர் சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கொம்பாக்கத்தை சேர்ந்த ராஜகோபால், 47; பாப்பாஞ்சாவடியை சேர்ந்த எல்லப்பன், 51; ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
